தேசிய தகுதி தேர்வு முகமையால் நடத்தப்பட்ட பல்கலைக்கழக நெட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வு முடிவுகளை ugcnet.nta.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
யூஜிசியின் இந்த இணைவழி தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதிவரை நடைபெற்றன.
இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக விடைகள் மார்ச் 23ஆம் தேதி வெளியாகின. இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மார்ச் 25ஆம் தேதிக்குள், பிழையை சுட்டிக் காட்டி சமர்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
தொடர்ந்து இறுதியான விடைத்தாள்கள் ஏப்.6ஆம் தேதி வெளியாகின. இந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
நாடு முழுக்க உள்ள 186 நகரங்களில் உள்ள 663 தேர்வு மையங்களில் 5 கட்டங்களாக 6 நாள்கள் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை 8 லட்சத்து 34 ஆயிரத்து 537 பேர் எழுதினார்கள்.
விடைகளை சரிபார்ப்பது எப்படி?
1) ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
2) முகப்பு பக்கத்தில் உள்ள விடைத்தாள் என்ற தலைப்பை கிளிக் செய்யவும்.
3) நீங்கள் குறித்த மதிப்பெண்களுடன் விடை தாளை சரிபார்க்கவும்.
4) எதிர்கால பயன்பாட்டுக்கு விடை தாளை டவுன்லோடு செய்து பத்திரப்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“