Advertisment

UGC NET 2024: பொங்கலன்று நடைபெறும் தேர்வு ஒத்திவைப்பு; அறிவித்த தேசிய தேர்வு முகமை

UGC NET December 2024 Postponed: பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறவிருந்த யு.ஜி.சி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
UGC NET 2024 Postponed for January 15 Tamil News

ஜனவரி 15 ஆம் தேதி சமஸ்கிருதம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், சட்டம், மலையாளர், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு யு.ஜி.சி நெட் தேர்வு நடைபெறவிருந்தது.

UGC NET December 2024 Postponed: 

Advertisment

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்வுகள் ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. 

அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிசம்பர் 11-ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வுகள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2025 ஜனவரியில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை 14 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. அதில் ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம் (மாட்டுப் பொங்கல்) மற்றும் ஜனவரி 16 (உழவர் திருநாள் (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறவிருந்த யு.ஜி.சி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

Advertisment
Advertisement

ஜனவரி 15 மற்றும் 16 பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விடுமுறை நாட்களில் நடத்த திட்டமிட்டு இருந்த யு.ஜி.சி-நெட் தேர்வை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா, தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதினர். 

ஒத்திவைப்பு

ஜனவரி 15 ஆம் தேதி சமஸ்கிருதம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், சட்டம், மலையாளர், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு யு.ஜி.சி நெட் தேர்வு நடைபெறவிருந்தது. தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான அட்மிட் கார்டு ஏற்கனவே வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Ugc exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment