UGC NET December 2023: தேசிய தேர்வு முகமை (NTA) யூஜிசி (UGC NET) நெட் தேர்வு டிசம்பர் 2023 இன் பதிவு காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப விரும்பும் விண்ணப்பதாரர்கள் யூஜிசி நெட் (UGC NET) அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.ac.in இல் பதிவு செய்யலாம்.
மேலும், தற்போது கடைசி தேதி அக்டோபர் 31 இரவு 11:59 மணி ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்.28 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, பதிவு தேதிகளை நீட்டிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏஜென்சிக்கு பல கோரிக்கைகள் வந்துள்ளதாக என்டிஏ கூறியுள்ளது.
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- Ugcnet.nta.nic.in இணையதளத்தை அணுகவும்.
- முகப்பு பக்கத்தில் பதிவு (registration) இணைப்பை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பத்தில் முழுமையான தகவல்களை பதிவு செய்துவிட்டு தேர்வு கட்டணம் செலுத்தவும்.
- விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை பிரிண்ட்அவுட் நகல் எடுத்துக்கொள்ளவும்.
ஹால் டிக்கெட் அட்மிட் கார்டுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும், மேலும் தேர்வு டிசம்பர் 6 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : UGC NET December 2023 registration deadline extended; apply at ugcnet.nta.ac.in
UGC-NET என்பது இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ‘உதவி பேராசிரியர்’ மற்றும் ‘ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்’ ஆகியவற்றுக்கான தகுதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“