ஜூன் அமர்வுக்கான பல்கலைக்கழக மானியக் குழு தேசிய தகுதித் தேர்வு (UGC NET) 2024க்கான மறுதேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் யூ.ஜி.சி நெட் தேர்வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.ac.in-ல் அட்டவணையைப் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க:
அறிவிப்பின்படி, யூ.ஜி.சி நெட் ஜூன் 2024 தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் மீண்டும் நடத்தப்படும்.
தேர்வு மையத்தின் நகரம் குறித்த அறிவிப்பு, தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன், தேசிய தேர்வு முகமையின் இணையதள பக்கங்களான ugcnet.nta.ac.in மற்றும் nta.ac.in ஆகியவற்றில் வெளியிடப்படும்.
முன்னதாக, ஜூன் 18ம் தேதி பேனா மற்றும் பேப்பர் வடிவில், இரண்டு ஷிப்டுகளில் யூ.ஜி.சி நெட் தேர்வு நடத்தப்பட்டது. முதல் ஷிப்டுக்கான நேரங்கள் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் இருந்தது.
யூ.ஜி.சி நெட் ஜூன் 2024 தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக தேர்வு நடத்தப்பட்ட ஒரு நாள் கழித்து 'ரத்து' செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதிலும் இருந்து 317 நகரங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF), உதவிப் பேராசிரியராக நியமனம் மற்றும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பி.எச்.டி படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை யூ.ஜி.சி நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“