இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 300 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 78 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 300
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம்: 37,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழித் தேர்வு: கணினி வழித் தேர்வு கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வாக 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம், கணினி மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://uiic.co.in/recruitment/details/15257 என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2024
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.250.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/ASSISTANT_RECRUITMENT_2023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“