நாட்டிலுள்ள 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புக்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்க்கப்பட்டதைப் போலவே, ”இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பு மாதம் ரூ. 5000 இன்டர்ன்ஷிப் ஊக்கத்தொகையுடன் ஒரு முறை உதவித்தொகையான ரூ. 6000 உடன் கிடைக்கப்பெறும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, தேசிய தொழில்துறை தாழ்வார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 12 தொழில் பூங்காக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“