Advertisment

செப்டம்பர் 15-க்கு பிறகு பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வு - அமைச்சர் கே.பி.அன்பழகன்

செப்டம்பர் 15-க்குப் பிறகு பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
minister kp anbazhagan statement, university college final year semester exam, final year semester will be conduct after september 15th, அமைச்சர் கேபி அன்பழகன், செப்டம்பர் 15க்கு பிறகு பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு, கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு, செப்டம்பர் 15க்கு பிறகு தேர்வு, after september 15th final year exam, minister kp anbazhagan statement

Tamil News Today Live

செப்டம்பர் 15-க்குப் பிறகு பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டதால், தமிழக முதல்வர் பழனிசாமி, கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு தவிர அனைத்து அரியர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். உச்ச நீதிமன்றம் இறுதி ஆண்டு தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கான இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15-க்குப் பிறகு நடத்தப்பட உள்ளது.

இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மேற்படி இறுதி ஆண்டு தேர்வுகள் மாணாக்கர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதனால், மாணாக்கர்கள் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், B.Arch எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 7-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. B.Arch இளநிலை பட்டப்படிப்பிற்கு சேர விரும்பும் மாணாக்கர்கள் செப்டம்பர் 7-ம் தேதி முதல் www.tneaonline.org என்ற இணைய தளத்தில் தங்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
K P Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment