யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமாக மொத்த 796 காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகவே யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான  (சிஎஸ்இ) 2020 க்கு விண்ணப்பிக்கும் செயல்முறை இன்றோடு (மார்ச்- 3ஆம் தேதி ) முடிவடைகிறது.

ஆர்வமுள்ளவர்கள், upc.gov.in, upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று  விண்ணபிக்கலாம். 2020 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமாக மொத்த 796 காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை குறைவாகும். கடந்த நான்கு ஆண்டுகளாகவே யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்த ஆண்டு முதல் பல மாற்றங்களை யுபிஎஸ்சி செயல்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கு உயர்வயது வரம்பில் கொடுக்கப்பட்டு வந்த  தளர்வு இந்த ஆண்டு முதலில் நீக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

ஸ்டேப் 1:  upc.gov.in என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்

ஸ்டேப் 2: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டேப் 3: படிவம் I ஐ நிரப்பவும் (அடிப்படை டேட்டாக்கள் கேட்கப்படும்) .

ஸ்டேப் 4: படிவம் II- ஐ நிரப்ப வேண்டும் (தேர்வுக் கட்டணம், புகைப்படம், கையெழுத்து, அடையாள அட்டை போன்றவைகளின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் )

குறிப்பு : படிவம் ஒன்றில் கொடுக்கப்பட்ட அடையாள எண்ணாக கொடுக்கப்பட்டதை தான் படிவம் II-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்

ஸ்டேப்  5:  ரிஜிஸ்ட்ரேஷன் பக்கத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்

யுபிஎஸ்சி பிரிலிம்ஸ் தேர்வு மே மாதம் 31-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Upsc 2020 prelims exam application process closing date

Next Story
மின்வாரிய கேங்க்மேன் பணிக்கு விண்ணப்பித்தவரா? முக்கிய அப்டேட்tneb tangedco recruitment 2020, tneb tangedco jobs apply, tneb recruitment 2020 notification
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express