/tamil-ie/media/media_files/uploads/2023/03/army-1.jpg)
யூ.பி.எஸ்.சி வேலை வாய்ப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 04.06.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை – 459
காலியிட விவரம்
Indian Military Academy – 100
Indian Naval Academy – 32
Air Force Academy – 32
Officers’ Training academy, SSC (Men) – 276
Officers Training Academy, SSC Women – 19
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பொறியியல் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 20 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ 200. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.06.2024
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.