Advertisment

UPSC CDS வேலை வாய்ப்பு: 457 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிங்க!

UPSC CDS Jobs; ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளில் 457 அதிகாரி பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
army

UPSC CDS Jobs; ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளில் 457 அதிகாரி பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (COMBINED DEFENCE SERVICES EXAMINATION) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 457 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 09.01.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Combined Defence Services Examination (I)

காலியிடங்களின் எண்ணிக்கை – 457

காலியிட விவரம்

Indian Military Academy – 100

Indian Naval Academy – 32

Air Force Academy – 32

Officers’ Training academy (Men) – 275

Officers Training Academy (Women) - 18

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ 200. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2024

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/Notif-CDS-I-2024-Eng-20122023.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment