யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: ரூ. 3,000 ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி

முதன்மை தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு,  கட்டணம் ஏதுமின்றி, மாதம் ரூ. 3000 கல்வி ஊக்கத்தொகையுடன்  மூன்று மாதகால உண்டு உறைவிடப் பயிற்சியை தமிழக அரசு  அளிக்கிறது.

முதன்மை தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு,  கட்டணம் ஏதுமின்றி, மாதம் ரூ. 3000 கல்வி ஊக்கத்தொகையுடன்  மூன்று மாதகால உண்டு உறைவிடப் பயிற்சியை தமிழக அரசு  அளிக்கிறது.

author-image
WebDesk
New Update
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: ரூ. 3,000 ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி

upsc-civil-serive-main-examination :  ஐஏஎஸ்/ ஐபிஎஸ் போன்ற அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான மத்திய தேர்வாணைக் குழு நடத்தும் முதன்மைத் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள்  (Main Exam) தமிழக அரசு நடத்தும் அகில இந்திய குடுமைப்பணித்  தேர்வு பயிற்சி மையத்தில் கலந்து கொள்ளலாம்.

Advertisment

முதன்மை தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு,  கட்டணம் ஏதுமின்றி, மாதம் ரூ. 3000 கல்வி ஊக்கத்தொகையுடன்  மூன்று மாதகால உண்டு உறைவிடப் பயிற்சியை தமிழக அரசு  அளிக்கிறது.

இப்பயிற்சி சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘அகில இந்திய குடுமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில்’ அளிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆர்வமும், தகுதியும் (முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் ) உள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  இப்பயிற்சிக்கான  ஆன்லைன் விண்ணப்பம் 3-11- 2020 அன்றுடன் நிறைவடைகிறது.

Advertisment
Advertisements

கூடிய தகவல்களை,  http://www.civilservicecoaching.com/ என்ற இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

முன்னதாக, குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வுகள் கடந்த மாதம் 4ம் தேதி நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வுக்காண   விண்ணப்பப்படிவங்கள் மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்((https://upsconline.nic.in)) வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி மாலை 6.00 வரை மட்டும் இடம்பெற்றிருக்கும். அனைத்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்களும் 08/01/2021 வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ள குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு -அனுமதிக்காக விரிவான விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.

Upsc Civil Service Exam Upsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: