scorecardresearch

UPSC CSE 2023; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக விருப்பமா? டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணியிடங்களை நிரப்பும் இந்திய குடிமை பணிகள் தேர்வு அறிவிப்பு; பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

UPSC
UPSC

இந்தியாவின் மிக உயர்ந்த பணியிடங்களுக்கான தேர்வான இந்திய குடிமை பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமை பணி சேவைகளின் தேர்வுக்கான அறிவிப்பு இது.

இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இந்திய குடிமை பணிகள் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு மூலம் கீழ்கண்ட பதவியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

  • Indian Administrative Service
  • Indian Foreign Service
  • Indian Police Service
  • Indian Audit and Accounts Service, Group ‘A’
  • Indian Civil Accounts Service, Group ‘A’
  • Indian Corporate Law Service, Group ‘A’
  • Indian Defence Accounts Service, Group ‘A’
  • Indian Defence Estates Service, Group ‘A’
  • Indian Information Service, Group ‘A’
  • Indian Postal Service, Group ‘A’
  • Indian P&T Accounts and Finance Service, Group ‘A’
  • Indian Railway Protection Force Service, Group ‘A’
  • Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’
  • Indian Revenue Service (Income Tax) Group ‘A’
  • Indian Trade Service, Group ‘A’ (Grade III)
  • Indian Railway Management Service, Group ‘A’
  • Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)
  • Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’
  • Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service (DANIPS), Group ‘B’
  • Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’
  • Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1105

கல்வித் தகுதி: இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.08.2023 அன்று 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 100., SC/ST, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு: முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்கள் உடைய கொள்குறி வகை விடையளித்தல் தேர்வாக நடைபெறும். முதல் தாள் 100 பொது வினாக்கள் அடங்கிய தேர்வாக 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இரண்டாம் தாள் 80 திறனறி வினாக்கள் அடங்கிய தேர்வாக 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தவறான விடைகளுக்கு எதிர்க்குறி மதிப்பெண்கள் வழங்கப்படும்.

முதல் நிலைத் தேர்வு நடைபெறும் தேதி : 28.05.2023

இந்த தேர்வில் இரண்டாம் தாளில் 33% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, முதல் தாள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். முதல் தாளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே.

முதன்மைத் தேர்வு: இந்த தேர்வு 9 தாள் அடங்கிய எழுத்து தேர்வாக நடைபெறும். அதாவது விரிவான விடையளித்தல் தேர்வு. இவற்றில் 2 தாள்கள் தகுதித் தேர்வு மட்டுமே. முதன்மைத் தேர்வு மொத்தம் 1750 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

நேர்முகத் தேர்வு: நேர்முகத் தேர்வு மொத்தம் 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.02.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CSP-23-engl-010223.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Upsc civil services exam 2023 application details in tamil