Advertisment

நீங்கள் பட்டதாரியா? 796 பணியிடங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது : அழைக்கிறது UPSC

UPSC Civil Services Exam notification 2020 : UPSC தேர்வுகளின் மூலமாகவே, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஆர்டிஎஸ் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு - EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு

UPSC Civil Services Preliminary Exam 2020 Date: மத்திய பணியாளர் தேர்வாணையம் ( UPSC), மத்திய அரசில் காலியாக உள்ள 796 பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியும், திறமையும் வாய்ந்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Advertisment

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் மற்றும் இந்திய வனத்துறை அதிகாரிகள் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தேர்வர்கள் UPSC அதிகாரப்பூர்வ இணையதளங்களான upsc.gov.in மற்றும் upsconline.nic.in மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மொத்த பணியிடங்கள் : 796

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 2020, பிப்ரவரி 12

இறுதி நாள் : 2020, மார்ச் 03

முதனிலை தேர்வு தேதி : 2020, மே 31

தேர்வர்கள், இந்த முதனிலை தேர்வை 6 முயற்சிகள் வரை முயன்று நிறைவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

முதனிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பின் முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு உள்ளிட்டவைகளை நிறைவு செய்தல் வேண்டும்.

முதனிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆன்லைனில், விரிவான விண்ணப்ப படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விரிவான விண்ணப்ப படிவத்தில், தேர்வர்கள், தான் எந்த துறைக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்ற விபரத்தை நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

தேர்வர்கள் 21 வயது முதல் 32 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை உண்டு

தேர்வுக்கட்டணம்

தேர்வு கட்டணம் - ரூ.100

எஸ்சி, எஸ்டி பிரிவு தேர்வர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுமுறை

முதனிலை தேர்வு, இரண்டு தாள்களை உள்ளடக்கியதாக இருக்கும். முதல் பகுதி 100 கேள்விகளையும், 2ம் பகுதி 80 கேள்விகளையும் கொண்டது. இரண்டு பகுதிகளும் சேர்த்து 400 மதிப்பெண்ககளுக்கு தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கும், 3ல் 1 பங்கு மதிப்பெண் கழிக்கப்படும்.

UPSC தேர்வுகளின் மூலமாகவே, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஆர்டிஎஸ் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை

upsc.gov.in இணையதளத்திற்கு செல்லவும்

அதில் UPSC civil services examination link தெரிவு செய்யவும்

I agree பட்டனை அழுத்தி, கேட்கும் விபரங்களை பதிவு செய்யவும்

முதல் மற்றும் இரண்டாம் படிவங்களை நிரப்பவும்

தேர்வு கட்டணத்தை செலுத்தி சப்மிட் பட்டனை அழுத்தவும்

Upsc Civil Service Exam Upsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment