UPSC Civil Services 2019 Examination Date: ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமையியல் பணிகளுக்கான தேர்வு அட்டவணையை யூ.பி.எஸ்.சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 குடிமையியல் பணிகளுக்கு யூ.பி.எஸ்.சி தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான யூ.பி.எஸ்.சி தேர்வு அட்டவணையை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 896 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படவிருக்கும் நிலையில், தகுதியானவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு யூ.பி.எஸ்.சி கேட்டுக் கொண்டுள்ளது.
காலியிடங்கள்
896
வயது வரம்பு
01.08.2019-ன் படி 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு தரப்படும்.
தகுதி
ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும், இறுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் கூட விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
பிரிலிமினரி எனப்படும் முதல்நிலைத் தேர்வு, அதில் வெற்றியடைந்தவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு, பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு மையம்
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100-ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு அட்டவணை உள்ளிட்ட மற்ற விபரங்களை தளத்தில் பார்க்கவும்.