மே 28 அன்று, சிவில் சர்வீசஸ் தேர்வை லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதிய நிலையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) முதல்நிலைத் தேர்வின் (Prelims) சிரம நிலை அதன் தரநிலைக்கு ஏற்ப இருக்கும் என்று உறுதியளித்தது. இந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வில் விடையளிக்க அவர்கள் கடைப்பிடித்த முறைகள் வீணானதாகத் தோன்றியதால், விண்ணப்பதாரர்கள் குழப்பமடைந்தனர்.
நீக்குதல் முறையின் பயன்பாடு, CSAT தேர்வின் மேம்பட்ட கடினநிலை மற்றும் விளையாட்டு போன்ற தலைப்புகளின் அறிமுகம் ஆகியவை இந்த ஆண்டு புதிதாக இருந்தன. இருப்பினும், தேர்வர்களை மிகவும் கடினபடுத்தியது பிரபலமான நீக்குதல் (Elimination) முறையின் மூலம் பதிலளிக்க முடியாத தந்திரமான கேள்விகள்.
இதையும் படியுங்கள்: தமிழக போலீசில் 750 எஸ்.ஐ பணி: நெருங்கும் கடைசி தேதி; விண்ணப்பம் செய்வது எப்படி?
தேர்வுகளில் விடையளிப்பதற்கான எலிமினேஷன் முறை நுட்பம் என்ன?
யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு என்பது ஒரு கொள்குறி வகை தாள் ஆகும், இதில் ஒவ்வொரு கேள்வியும் நான்கு விடை விருப்பங்களுடன் இருக்கும் மற்றும் தேர்வு எழுதும் தேர்வர் நான்கு விருப்பங்களிலிருந்து சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
முதல்நிலை தேர்வில், பெரும்பாலான விருப்பத்தேர்வுகள் சரியான பதிலுக்கு மிக அருகில் இருப்பதால், சரியான பதிலைப் பெற விரும்புவோர் நீக்குதல் முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த நுட்பம் தெளிவாகத் தவறான விருப்பங்களை முறையாக நீக்கி, சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு என்ன வித்தியாசமாக இருந்தது?
இதைப் புரிந்து கொள்ள, இந்த ஆண்டு கேள்விகளில் ஒன்றைப் பார்ப்போம்.
இந்த கேள்வியில், விருப்பம் d சரியான பதில்.
பாரம்பரிய முறையில், UPSC கீழ்கண்டவாறு விருப்பங்களை வழங்கியிருக்கும்
a) விருப்பம் 2 மற்றும் 3 சரியானது
b) விருப்பம் 3 சரியானது
c) 1, 2 மற்றும் 3 சரியானது
d) இவை எதுவும் இல்லை
எவ்வாறாயினும், ஒரு பதிலை கண்டுபிடிக்க கொடுக்கப்பட்ட மூன்று விடை விருப்பங்களைப் பற்றியும் தேர்வர் விரிவாக அறிந்திருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட விருப்பத்தேர்வில் ஒன்று கூட தேர்வருக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், நீக்குதல் முறையைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் சரியான மற்றும் தவறான ஜோடிகளின் விருப்பத்தை அவர்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக சரியான ஜோடிகளின் எண்ணிக்கையைக் கண்டறிய மட்டுமே விடை விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதே வகையிலான பல கேள்விகள் இந்த தாளில் இடம்பெற்றிருந்தன.
BYJU'S இன் UPSC ஆசிரியரான சர்மத் மெஹ்ராஜ், அத்தகைய வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளை முயற்சிக்க, தேர்வர்கள் கொடுக்கப்பட்ட அனைத்து விடை விருப்பங்களிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
"முன்னதாக, நான்கில் இரண்டு விடை விருப்பங்களில் ஒரு தேர்வர் உறுதியாக இருந்தால், நீக்குதல் நுட்பங்கள் உதவும். இந்த வகையிலான கேள்விகளுக்கு விடையளிக்க, முழு பாடத்திட்டத்தையும் முழுமையாகப் படிப்பது அவசியம். ஆர்வமுள்ளவர்கள் தவிர்க்கும் உண்மையான தகவல்களுக்கு இந்த ஆண்டு தேர்வாணையம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு கட்-ஆஃப் குறைவாக இருக்கும்” என்று மெஹ்ராஜ் கூறினார்.
இந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற UPSC ஆர்வலர் அபிஷேக் குமார், இந்த முறை மாற்றம் எதிர்பாராதது என்றும், பயிற்சி நிறுவனங்களை கண்மூடித்தனமாகப் பின்தொடர்வதில் இருந்து மாணவர்களை மாற்றும் என்றும் கூறினார்.
மேலும், “நான் ராஜேந்திர நகரில் பயிற்சிகளில் கலந்து கொண்டேன், கேள்விகளைத் தீர்ப்பதற்கு நீக்குதல் முறையைப் பயன்படுத்துவதில் ஒரு தேர்வருக்குப் பயிற்சி அளிப்பதே அவர்களின் முக்கிய கவனம். அவர்கள் முக்கியமாக ஒட்டுமொத்த தேர்வை விட முதல்நிலை தேர்வுக்கான தயாரிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். இதனாலேயே பயிற்சியை விட்டுவிட்டு சுயமாகப் படிக்கத் தயாராகிவிட்டேன். விரிவான படிப்பு தேவைப்படும் முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பில் நான் முக்கியமாக கவனம் செலுத்தினேன். இது தேர்வில் வெற்றிபெற உதவியது,” என்றும் அபிஷேக் குமார் பகிர்ந்து கொண்டார்.
இது நிரந்தரமான மாற்றமா?
இதுகுறித்து நிபுணர்கள் வேறுபடுகின்றனர். முதல்நிலை தேர்வில் விடையளிக்க பயன்படுத்தப்படும் எலிமினேஷன் முறையின் நீக்கத்தில் ஒரு மாற்றத்தைக் காணலாம் என்று சிலர் ஒப்புக்கொள்கிறார்கள், மற்றவர்கள் இந்தத் தேர்வின் கணிக்க முடியாத தன்மையானது நிச்சயமான எதற்கும் சிறிய இடத்தை அளிக்கிறது என்று நம்புகிறார்கள்.
ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் நிறுவனர் மற்றும் இயக்குநரான ஸ்ரீராம் ஸ்ரீரங்கம், ஆர்வமுள்ளவர்கள் இதை ஒரு மாற்றமாகப் பார்த்து, அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றார்.
"இந்த ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளது, இது ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, மேலும் சிலர் தூக்கத்தை இழந்தனர். இது எலிமினேஷன் டெக்னிக்கில் செய்யப்பட்ட மாற்றம். அதற்காக ஒருவர் தூக்கத்தை இழக்க வேண்டுமா? இது புதிய உத்தரவா அல்லது வெறும் பிசினா என்பதை நாம் பார்க்க வேண்டும். இருப்பினும், 2024 முதல்நிலை தேர்வுகளுக்கு, தேர்வர்கள் இதை ஒரு போக்காகக் கருதி தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்,” என்று ஸ்ரீரங்கம் கூறினார்.
இதற்கிடையில், ஐ.ஏ.எஸ் குருகுலத்தின் கல்வியாளர் பிரனய் அகர்வால், இந்த தேர்வை பொது மாதிரியாக எடுக்க வேண்டாம் என்று ஆர்வலர்களை எச்சரிக்கிறார்.
“பொது அறிவுத் தாளில் உள்ள கேள்விகள் கடந்த காலத்திலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுள்ளன. எனவே, இது யூ.பி.எஸ்.சி.,யின் பிம்பத்தை வலுப்படுத்துகிறது, யூகிக்க முடியாத பொது சேவை ஆணையம் என பல மாணவர்கள் இதை குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், ஒரு வருடம் ஒரு மாதிரியை உருவாக்காது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அடுத்த ஆண்டு முதல் இதே போன்ற சிரம நிலைகள் தோன்றாமல் போகலாம்,” என்று பிரனய் அகர்வால் கூறினார்.
யு.பி.எஸ்.சி தேர்வை கடந்த நான்கு ஆண்டுகளாக எழுதி வரும் ஸ்ரீஜா சி, இந்த ஆண்டும் தகுதி பெறத் தவறிவிட்டார். “யு.பி.எஸ்.சியின் தொடர்ந்து மாறிவரும் போக்குகளால் நான் ஏமாற்றமடைகிறேன். பாடத்திட்டமே மிகப் பெரியது, ஒவ்வொரு அம்சத்தையும் நம்மால் விரிவாக அறிந்துக் கொள்ள முடியாது. இந்த தேர்வில் கணிக்க முடியாத தன்மை மிக அதிகமாக உள்ளது, இந்த கட்டத்தில் நான் எனது தயாரிப்பைத் தொடர வேண்டுமா என்று தெரியவில்லை. தேர்வு முறையின் அடிப்படையில் சில தரநிலைகள் அமைக்கப்பட வேண்டும், பாடத்திட்டம் எப்படியும் முடிவற்றதாக இருக்கும்,” என்று ஸ்ரீஜா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.