/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-04T143921.682.jpg)
யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
UPSC CSE Mains Result 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இன்று (ஏப்ரல் 16) சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வில் கலந்து கொண்டவர்கள் தகுதிப் பட்டியலை அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/ இல் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: UPSC Civil Services Exam Result 2023: Aditya Srivastava is AIR 1, men candidates dominate top ranks
இந்த ஆண்டு, ஆதித்ய ஸ்ரீவஸ்தவா அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். அனிமேஷ் பிரதான் 2 ஆம் இடம் பிடித்தார். டோனூரு அனன்யா ரெட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
மொத்தம் 1016 பேர் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் யு.பி.எஸ்.சி.,யால் வெளியிடப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 355 தேர்வர்களின் தேர்வு தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 24 வரை இரண்டு ஷிப்ட்களில் விரிவான விடையளிக்கும் முறையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஷிப்டும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மூன்று மணி நேரம் நீடித்தது.
UPSC CSE மெயின்ஸ் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் — https://upsc.gov.in/
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள தேர்வு முடிவு இணைப்பிற்குச் செல்லவும்
படி 3: ஒரு புதிய டேப் PDF வடிவில் திறக்கப்படும்
படி 4: PDF இல் உங்கள் ரோல் நம்பரைத் தேடவும்.
படி 5: PDF ஐ பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மொத்தம் 347 பொது பிரிவினர், 116 EWS பிரிவினர், 303 OBC, 165 SC மற்றும் 86 ST பிரிவினர் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.