Advertisment

UPSC CSE 2024: சிவில் சர்வீஸ் தேர்வு விண்ணப்பத்தில் முக்கிய மாற்றம்; விபரம் இங்கே

UPSC CSE 2024: பெயர் மற்றும் தேதியுடன் புகைப்படத்தைப் பதிவேற்றவும், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாற்றங்கள் இங்கே

author-image
WebDesk
New Update
UPSC Prelims

UPSC CSE 2024: பெயர் மற்றும் தேதியுடன் புகைப்படத்தைப் பதிவேற்றவும், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாற்றங்கள் இங்கே

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

UPSC CSE 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீசஸ் (முதல்நிலை) தேர்வு (CSE) 2024க்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியது. CSE முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்துடன், UPSC இந்த ஆண்டு விரிவான தகவல் புல்லட்டின், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை ஆகியவற்றை https://upsc.gov.in/ இல் வெளியிட்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: UPSC CSE 2024: Upload photograph with name and date, new changes introduced this year

கடந்த ஆண்டுகளைப் போல, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை மட்டும் குறிப்பிட்ட அளவுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றில்லாமல், இந்த ஆண்டு, UPSC ஆனது UPSC CSE விண்ணப்பப் படிவம் 2024ல் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய பல வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளது.

முதலில், ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கி 10 நாட்களுக்கு மேல் இல்லாத சமீபத்திய புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுமாறு UPSC விண்ணப்பதாரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படங்கள் பிப்ரவரி 4, 2024க்கு முன் எடுக்கப்பட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி ஆகியவை புகைப்படத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்று UPSC கூறியுள்ளது.

விண்ணப்பதாரர்களின் முகம் புகைப்படத்தில் நான்கில் மூன்று பங்கு இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என யு.பி.எஸ்.சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும், அதாவது முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அல்லது ஆளுமைத் தேர்வில் அவர்களின் தோற்றம் அவர்களின் புகைப்படத்துடன் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்யுமாறும் ஆணையம் விண்ணப்பதாரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டி, UPSC கூறியது: உதாரணமாக, ஒரு தேர்வர் தாடி வைத்த புகைப்படத்தை பதிவேற்றினால், அவர் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் / ஆளுமைத் தேர்வில் அதே தோற்றத்துடன் தோன்ற வேண்டும். கண்ணாடி, மீசை போன்றவையும் அப்படியே இருக்க வேண்டும்.

தேர்வரின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களின் அளவு .jpg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு கோப்பும் 20 KB முதல் 300 KB வரை இருக்க வேண்டும்.

UPSC இந்த ஆண்டு CSE க்கு மொத்தம் 1,056 மற்றும் IFoS க்கு 150 காலியிடங்களை அறிவித்துள்ளது. UPSC CSE 2024 முதல்நிலைத் தேர்வு மே 26 அன்று நடைபெற உள்ளது. CSE முதல்நிலைத் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் UPSC முதன்மைத் தேர்வில் பதிவு செய்யத் தகுதி பெறுவார்கள். முதன்மைத் தேர்வு விரிவான விடையளிக்கும் வகையில் இருக்கும் மற்றும் செப்டம்பர் 20 முதல் ஐந்து நாட்களுக்கு நடத்தப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment