/indian-express-tamil/media/media_files/YMSCvX0uSY9uI2M7XwNz.jpg)
யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி மாற்றம்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மார்ச் 19 அன்று சிவில் சர்வீசஸ் தேர்வுகள் (CSE) 2024க்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு மே 26, 2024 அன்று திட்டமிடப்பட்டது, தற்போது ஜூன் 16 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் - ஜூன் 2024 இல் 18வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை சனிக்கிழமையன்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தேர்வு கால அட்டவணையை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: UPSC defers Civil Services Prelims 2024 exam due to Lok Sabha elections
யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக, சிவில் சர்வீசஸ் தேர்வுகள் 2024 க்கான பதிவு காலக்கெடுவை யு.பி.எஸ்.சி நீட்டித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 6 (மாலை 6 மணி) வரை நீட்டிக்கப்பட்டது. திருத்தச் சாளரம் மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை திறந்திருந்தது.
மொத்த காலியிடங்கள், தகுதி
இந்த ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மொத்தம் 1,056 காலியிடங்களையும், இந்திய வனிப் பணி தேர்வுக்கு (IFoS) 150 காலியிடங்களையும் ஆணையம் அறிவித்துள்ளது. UPSC CSE தேர்வு முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு கொள்குறி வகை கேள்விகளைக் கொண்டிருக்கும். கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற விண்ணப்பதாரர்கள் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கு பதிவு செய்யத் தகுதி பெறுவார்கள்.
தேர்வுக்குத் தகுதிபெற, ஒரு விண்ணப்பதாரர் 21 வயதை அடைந்திருக்க வேண்டும் மற்றும் ஆகஸ்ட் 1, 2024 அன்று 32 வயதை எட்டியிருக்கக்கூடாது, அதாவது, விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 2, 1992 க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2003க்குப் பிறகு அல்ல, என தேர்வு அறிவிப்பை வெளியிடும் போது ஆணையம் கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.