UPSC ESE Main 2019: இ.எஸ்.இ எனப்படும் இன்ஜினியரிங் சர்வீஸுக்கான முதல்நிலை தேர்வுக்கான முடிவை, யூ.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. ஜனவரி 6, 2019 அன்று நடந்த இத்தேர்வு முடிவு upsc.gov.in தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்கள், ஜூன் 30-ம் தேதி நடக்கும் இன்ஜினியரிங் சர்வீஸுக்கான மெயின் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் யூ.பி.எஸ்.சி தளத்தில் இருக்கும், ரயில்வே அமைச்சகத்தின் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மெயின் தேர்வுக்கு 3 வாரம் முன்னதாக விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் இதர தகவல்கள் upsc.gov.in தளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Upsc engineering services main exam date