மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), இந்திய பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிக்கான தேர்வுகளை நடத்துவதைப் போல் ஆண்டுதோறும் இந்திய பொறியியல் சேவை பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது 232 பொறியியல் சேவை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி. 22.11.2024
இந்திய பொறியியல் சேவை (INDIAN ENGINEERING SERVICES)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 232
கல்வித் தகுதி: சிவில் (Civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் (Electrical), எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் (Electronics & Communication) ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு (பி.இ அல்லது பி.டெக்) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.01.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், EXSM பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2024 ஆகும். தகுதியுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. இருப்பினும் பெண்கள் மற்றும் SC/ST/PwBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“