Advertisment

UPSC: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு; 406 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

UPSC Exam; தேசிய பாதுகாப்பு அகாடமியில் 406 காலியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
women officers to be Colonels, 108 can lead Army units first time Tamil News

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (National Defence Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 406 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.12.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

தேசிய பாதுகாப்பு அகாடமி

காலியிடங்களின் எண்ணிக்கை – 370

காலியிட விவரம்

Advertisment
Advertisement

Army – 208

Navy – 42

Air force – 120

தேசிய கடற்படை அகாடமி

காலியிடங்களின் எண்ணிக்கை – 36

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ 100. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024 

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Army Upsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment