12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உங்களுக்கு வேலை ரெடி!

UPSC NDA/NA I 2019 Exam Notification Released on upsc.gov.in: இதற்கான எழுத்துத்தேர்வு பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ளன. பிளஸ்-2 முடித்த மாணவர்களும், தற்போது பிளஸ்-2...

UPSC NDA/NA 2019 Examination Notification Released, 392 Vacancy Available: ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் பணிபுரிய பிளஸ்-2 மாணவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி, நேவல் அகாடமி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

ராணுவம், விமானப்படை பிரிவுகளைத் தேர்வுசெய்வோர் புனேயில் உள்ள நேஷனல் டிஃபன்ஸ் அகாடமிக்கும், கடற்படையைத் தேர்வு செய்யும் மாணவர்கள் நேவல் அகாடமிக்கும் அனுப்படுகிறார்கள்.தற்போது 2019-ம் ஆண்டு நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி, நேவல் அகாடமி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பினை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதற்கான எழுத்துத்தேர்வு பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ளன. பிளஸ்-2 முடித்த மாணவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வுமுறை, பாடத்திட்டம், பயிற்சி உள்ளிட்ட விவரங்களை upsconline.nic.in இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். இன்று முதல் விண்ணப்பங்கள் ஆன்லைனில் விநியோகிக்கப்படுகின்றன.

தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10 +2 பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், கணிதம் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close