இந்த ஆண்டு குடிமைப் பணித் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வுகள் வரும் மே மாதம் 31ம் தேதி நடைபெறும் என ஏற்ககனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பொது முடக்கத்திற்குப் பின்னர் நிலவும் சூழலைப் பொறுத்து, தேவைப்பட்டால் முதல்நிலைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
எனவே, யுபிஎஸ்சி தேர்வர்கள் எந்தவித தடுமாற்றமின்றி, வரும் பிரிலிம்ஸ் தேர்வுக்கு தொடர்ந்து தயாராவது நல்லது என்று கருதப்படுகிறது.
2019- குடிமைப் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வுகள்( Personality Test ) குறித்து, வரும் மே மாதம் 3-ம் தேதிக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுகள், இந்திய பொருளாதார சேவை , 2020 இந்திய புள்ளியியல் சேவை தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக யுபிஎஸ்சி ஏற்கனவே அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, எஸ் எஸ் சி நடத்தும் ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (அடுக்கு 1) 2019, இளநிலை பொறியாளர் (முதல் தாள்) தேர்வு, 2019, சுருக்கெழுத்தாளர் நிலை 'சி' மற்றும் 'டி' தேர்வு, 2019 மற்றும் ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு, 2018 ஆகியவற்றுக்கான மீதமுள்ள தேர்வு நாட்களுக்கான புதிய தேதிகள், பொது முடக்கத்தின் இரண்டாம் கட்டம் மே 3 தேதி அன்று முடிவுக்கு வந்தவுடன் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட தேதிகள், ஆணையம் மற்றும் ஆணையத்தின் பிராந்திய / துணை பிராந்திய அலுவலகங்களின் வலைதளங்களில் அறிவிக்கப்படும். ஆணையத்தால் வெளியிடப்பட்ட வருடாந்திர தேர்வு நாள்காட்டியும், இதர தேர்வுகளின் அட்டவணைகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்யப்டும்