மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவர் மாதம் எட்டாம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து,மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,"மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும் அறிவித்துள்ள பொதுமுடக்கம் நீக்கப்படுதல் மற்றும் தளர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்வுகள்/ நியமனத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை வெளியிட ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்வுகள் நேர்முகத்தேர்வுகள் இவை பற்றிய திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை விவரங்கள், யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு, 2019 எழுதிய, எஞ்சியுள்ள தேர்வர்களுக்கான ஆளுமைத்திறன் தேர்வுகள் 20 ஜூலை 2020 முதல் நடைபெறும். தேர்வர்களுக்கு தனித்தனியாகவும் தகவல் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தது.
திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை விவரங்கள் :
மேலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஊழியர் சேமநல நிதி அமைப்புக்கான EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நியமனத் தேர்வுக்கான புதிய தேதி ஆணையத்தின் இணையதளத்தில் 2021 தேர்வுகள்/ நியமனத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான அட்டவணை வெளியிடப்படும் போது சேர்த்து வெளியிடப்படும் என்றும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil