மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 151 துணை இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) 151 துணை இயக்குனர் (Deputy Director) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2021.
துணை இயக்குனர் (Deputy Director)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 151
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: நிர்வாகம் அல்லது கணக்கியல் அல்லது சந்தைப்படுத்தல் அல்லது காப்பீடு அல்லது வரி நிர்வாகம் அல்லது வருவாய்த்துறை அல்லது மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2021 ஆகும்.
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-Spcl-55-2021-engl_0.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil