UPSC Exam Dates 2019 : மக்கள் சேவைக்காக சிவில் சர்வீஸ் எழுதும் தேர்வர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கீழ் காணும் துறைகளில், கீழ் காணும் பணிகளுக்கான காலி இடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த தேர்வுகளுக்கான விண்ணப்ப முறைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் எந்தெந்த தேர்வுகள் எப்போது நடைபெறுகின்றது, எங்கு நடைபெறுகின்றது, தேர்வு முறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை.
நிதி அமைச்சகத்தில் வேலை (Assistant Director (Cost), Ministry of Finance)
நிதி அமைச்சகத்தில் துணை இயக்குநரக அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான தேர்வுகள் தலைமை ஆலோசகர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கணினித் தேர்வான இந்த தேர்வு அக்டோபர் மாதம் 20ம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.
காலி பணியிடங்கள் : 10
தேர்வு நாள் : அக்டோபர் 20, 2019
தேர்வு நேரம் : காலை 09:30 மணி முதல் காலை 11:30 மணி வரை
தேர்வு விதிமுறைகள்
- தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும்
- அனைத்து கேள்விகளுக்கும் சரிசமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்
- அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும்
- ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்
- தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்
- மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
டெல்லி அரசின் மெடிக்கல் ஆஃபிசர் தேர்வு (Recruitment of Medical Officer, Govt. of NCT of Delhi)
டெல்லி அரசின் ஜெனரல் டூயூட்டி மெடிக்கல் ஆஃபிசருக்கான (General Duty Medical Officer) கணினி தேர்வுகள் அக்டோபர் 20ம் தேதி நடைபெறுகிறது.
காலிப்பணியிடங்கள் – 327
தேர்வு தேதி – அக்டோபர் 20, 2019 (ஞாயிறு)
தேர்வு நேரம் – மதியம் 2 மணி முதல் 4 மணி வரை
தேர்வு விதிமுறைகள்
- தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும்
- அனைத்து கேள்விகளுக்கும் சரிசமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்
- அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும்
- ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்
- தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்
- மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
நீர் மேலாண்மை அமைச்சகத்தில் அசிஸ்டண்ட் ஹைட்ரோலஜிஸ்ட் பணிக்கான தேர்வுகள் (Recruitment of Assistant Hydrogeologist)
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் இந்த தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த கணினி தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 13ம் தேதி வழங்கப்பட்டு மே 2ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
காலியாக இருக்கும் பணியிடங்கள் – 50
தேர்வு தேதி – அக்டோபர் 20, 2019
தேர்வு நேரம் : காலை 09:30 மணி முதல் 11:30 மணி வரை (தேர்வர்கள் 8 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
தேர்வு விதிமுறைகள்
- தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும்
- அனைத்து கேள்விகளுக்கும் சரிசமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்
- அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும்
- ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்
- தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்
- மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
பாதுகாப்பு அமைச்சகத்தில் துணை ஆர்கிடெக்ட் பணிகளுக்கான காலியிடங்கள்
இந்த தேர்வும் மத்திய நீர் வளத்துறையின், நிலத்தடி நீர் மேம்பாட்டு வாரிய வளாகத்தில் நடைபெற உள்ளது.
காலியிடங்கள் : 7
தேர்வு தேதி : அக்டோபர் 20, 2019
தேர்வு நேரம் : மதியம் 2 மணி முதல் நான்கு மணி வரை (தேர்வர்கள் 12:30 மணிக்கே வருகை புரிய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
தேர்வு விதிமுறைகள்
- தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் .
- அனைத்து கேள்விகளுக்கும் சரிசமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்
- அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும்
- ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்
- தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும். பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது.
- மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
மத்திய சிவில் ஏவியேசன் துறையில் துணை இயக்குநர் பணியிடங்கள்
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 24, 2018 அன்று துவங்கியது. டிசம்பர் 13, 2018-டுடன் முடிவுக்கு வந்தது. பணியிடங்கள் 17, தேர்வு நாள். அக்டோபர் 20, 2019, தேர்வு நேரம் : காலை 09:30 மணி முதல் 11: 30 மணி வரையில்.
மேற்கூறிய தேர்வு நடைமுறைகளை இந்த தேர்வுக்கும் பின்பற்றப்படும்.