UPSC Recruitment Notification 2019: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி ) இந்திய அரசில் பல மட்டத்தில் காலியாக இருக்கும் 48 பணிகளுக்கான ஆன்லைன் விண்ணபங்களை வரவேற்கின்றது.
சீனியர் டிசைன் ஆபிசர் கிரேட் I ( கன்ஸ்ட்ரக்ஷன் ), சீனியர் டெக்னிக்கல் ஆபிசர், டிரெக்டர் (சேப்ட்டி) போன்ற பல பணிகளுக்கு தேர்வர்கள் விண்ணபிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் தேர்வர்கள் வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தேர்ந்தெடுக்கும் முறை : தேர்வர்கள் சமர்ப்பித்த ஆன்லைன் விண்ணப்பங்களில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் .
காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் : 48
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:
தேர்வுக் கட்டணம்: பொதுபிரிவு, ஓபிசி வகை தேர்வர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .25 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / பெண்கள் போன்ற வகை தேர்வர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிப்பது எப்படி : தேர்வர்கள், டிசம்பர் 12, 2019 க்குள் யூபிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான- upsconline.nic.in சென்று விண்ணப்பிக்க வேண்டும். தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கான நேர்காணல் தேதிகள் யுபிஎஸ்சி பின்னர் அறிவிக்கும்.
நேர்காணலின் போது எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் :
-மெட்ரிகுலேஷன் / 10 வது தர மதிப்பெண் தாள் (அல்லது) பிறந்த தேதியைக் குறிக்கும் சமமான சான்றிதழ்.
கல்வித் தகுதிக்கு சான்றாக பட்டம் / டிப்ளோமா சான்றிதழ்.
அனுபவ சான்றிதழுக்கு வேலைசெய்த அமைப்பு / துறையிலிருந்து சான்றிதழ்.
எஸ்சி / எஸ்டி / ஓபிசி என இடஒதுக்கீடு கோரும் வேட்பாளரின் சாதி சான்றிதழ் , தகுதிவாய்ந்த அதிகாரத்தால் வழங்கப்பட்ட உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்.