மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 577 அமலாக்க அதிகாரி மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) 577 அமலாக்க அதிகாரி மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூ.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.03.2023.
இதையும் படியுங்கள்: சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 560 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
அமலாக்க அதிகாரி (Enforcement Officer/ Accounts Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை – 418
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
உதவி ஆணையர் (Assistant Provident Fund Commissioner)
காலியிடங்களின் எண்ணிக்கை – 159
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2023
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-51-2023-engl-250223_0.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.