யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2022ம் ஆண்டு தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற இஷிதா கிஷோரின் மதிப்பெண் சான்றிதழ் வைரலாகி வருகிறது.
Advertisment
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சிவில் சர்வீஸ் 2022ம் ப்ரிலிமஸ் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டது. கிட்டதட்ட 5 லட்டத்திற்கும் அதிகமானவர்கள் இத்தேர்வை எழுதினர். நேர்முகத் தேர்வுக்கு 2,529 பேர் தகுதி பெற்றன. இதற்கான நேர்காணல் மே 18 அன்று நடைபெற்றது . இதில் 933 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் இத்தேர்வில் அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதல் இடம் பிடித்திருந்தார். இவரது மார்க் ஷீட் தற்போது வைரலாகி வருகிறது. இவர் ஒட்டுமொத்தமாக 1094 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எழுத்துத் தேர்வில் 901 மதிப்பெண்களையும், நேர்முகத் தேர்வில் 193 மதிப்பெண்களையும் அவர் பெற்றுள்ளார். அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகளைத் தனது விருப்பப் பாடமாகக்கொண்டு தேர்வுக்கு தகுதி பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
ஊடகத்திடம் அவர் பேட்டியளித்தபோது, “ படிப்பதற்கு தேவையான குறிப்புகளை நானே தயார்படுத்திக்கொண்டேன். படிப்பதற்கு தேவையான ஆவணங்களை நானே தயார் செய்தேன். 3 வது முறையாக தேர்வை எதிர்கொண்டதால், ஆன்லைனில் பயிற்சி வகுப்புகளில் பயின்றேன். ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரம் படிப்பேன். ஒரு பாடத்தை நாம் படிக்கும்போது, அதன் சிக்கலான பகுதியை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் படிக்கும் பாடத்தை பற்றிய விரிவான அட்டவணையை நாம் தயார் செய்திட வேண்டும். ”என்று அவர் கூறினார்.
படிப்பைத் தவிற இவருக்கு விளையாட்டில் ஆர்வம் உள்ளது. இந்நிலையில் அகில இந்திய அளவில் இண்டாம் இடத்தை கரிமா சோனி மற்றும் 3ம் இடத்தை உமா ஹராதி பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil