யு.பி.எஸ்.சி தேர்வு: கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் தேர்ச்சி சதவீதம் என்ன?
மருத்துவ நிலை, தேர்வர்களின் தகுதி, சம்பந்தப்பட்ட பிரிவில் காலியிட நிலை ஆகியவற்றின் அடிப்படையில் யுபிஎஸ்சி கேடர் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பதிலளித்தார்.
மருத்துவ நிலை, தேர்வர்களின் தகுதி, சம்பந்தப்பட்ட பிரிவில் காலியிட நிலை ஆகியவற்றின் அடிப்படையில் யுபிஎஸ்சி கேடர் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பதிலளித்தார்.
இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தேர்வர்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது.
Advertisment
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் மக்களைவியில் இது குறித்து கூறுகையில்,"2017ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வில், யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் பரிந்துரைத்த 1056 பேர் கொண்ட இறுதி பட்டியலில், 254 பெண் தேர்வர்கள் அடங்குவர்" என்றார்.
மக்களவையில் பகிரப்பட்ட தரவுகளின்படி, 2013ம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வில் யுபிஎஸ்சி பரிந்துரைத்த 1228 தேர்வர்களில், பெண் தேர்வர்களின் எண்ணிக்கை 261( அதாவது, 21.25 சதவீதம்).
Advertisment
Advertisements
2015 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட 1164 தேர்வர்களில், வெறும் 229 பெண் தேர்வர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதாவது 19.67 சதவீதம். ஒப்பீட்டளவில் இது பெரும் வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது.
இருப்பினும், பெண்கள் பங்கேற்பதை இந்திய அரசு ஊக்குவித்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
ஜிதேந்தர் சிங்,“அரசு பணியில் பாலின சமநிலையை பிரதிபலிக்கும் கொள்கையை அரசாங்கம் கொண்டிருக்கிறது, எனவே,பெண் தேர்வர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் விண்ணப்பிக்கவும், முயற்சிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். உதாரணாமாக,பெண்களுக்கு தேர்வு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது" என்றார்.
இதற்கிடையில், சிவில் சர்விஸ் கேடர் ஒதுக்கீடு தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேர்வில் மதிப்பெண் மூலம் உருவாக்கிய தரவரிசை பட்டியல், தேர்வர்கள் வெளிப்படுத்திய பல்வேறு சேவைகளின் விருப்பங்கள், மருத்துவ நிலை, தேர்வர்களின் தகுதி, சம்பந்தப்பட்ட பிரிவில் காலியிட நிலை ஆகியவற்றின் அடிப்படையில் கேடர் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் பதிலளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பிற பதவிகளை நிரப்ப யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனால் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வில் கிட்டத்தட்ட 10 லட்சம் தேரவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.