Advertisment

எச்1-பி விசா மூலம் இந்தியர்களுக்கு வேலை அளிக்கும் டி.சி.எஸ்; அமெரிக்காவில் சர்ச்சை

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இந்தியர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு வழங்குகிறது; எச்1-பி விசா மூலம் வேலை வழங்குவதால் அமெரிக்காவில் சர்ச்சை

author-image
WebDesk
New Update
tcs

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் (கோப்பு படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் அமெரிக்காவில் ஒரு சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது, நிறுவனம் "தங்கள் இனம் மற்றும் வயதின் அடிப்படையில் சட்டவிரோதமாக பாகுபாடு காட்டுவதாகவும், அவர்களை பணிநீக்கம் செய்ததாகவும், அவர்களின் சில வேலைகளை தற்காலிக வேலை விசாக்களில் குறைந்த ஊதியம் பெறும் இந்திய குடியேறியவர்களுக்கு மாற்றியதாகவும்" அமெரிக்க பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: US techies accuse TCS of ‘illegally’ firing them, shifting work to ‘lower-paid Indian immigrants’: Report

தி வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் அறிக்கையில், டி.சி.எஸ் தொழில்நுட்ப நிறுவனமானது குறுகிய அறிவிப்பின் பேரில் அவர்களை பணிநீக்கம் செய்ததாகவும், எச்1-பி விசாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்டு அவர்களின் பல வேலையிடங்களை நிரப்புவதாகவும் அனுபவம் வாய்ந்த அமெரிக்க வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டிசம்பரின் பிற்பகுதியில் இருந்து, குறைந்தபட்சம் 22 தொழிலாளர்கள் TCS க்கு எதிராக சமமான வேலை வாய்ப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் உள்ள ஒரு டஜன் மாநிலங்களில் 40 முதல் 60 வயதுக்குட்பட்ட பல காகசியர்கள், ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிக் அமெரிக்கர்களை குறுகிய அறிவிப்பில் TCS சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்துள்ளதாக பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில புகார்தாரர்கள் தங்கள் திட்டங்கள் அல்லது அவர்களின் பணியின் சில பகுதிகள் "தற்காலிக வேலை விசாவில் குறைந்த ஊதியம் பெறும் இந்திய குடியேற்றவாசிகளுக்கு" மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர், மற்றவர்கள் "இளைய, குறைந்த அனுபவமுள்ள இந்திய பணியாளர்களுக்கு H-1B விசாக்கள்” மூலம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

சில முன்னாள் பணியாளர்கள் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையிடம், பல துறைகளில் பல ஆண்டுகளாக நல்ல செயல்திறன் இருந்தபோதிலும், கடந்த ஆண்டு அவர்கள் தங்கள் திட்டங்களில் இருந்து திடீரென நீக்கப்பட்டதாக கூறினர். நிறுவனத்திற்குள் தங்களுக்கான புதிய பணிகளைக் கண்டறியும் முயற்சிகள் நிறுவனத்தின் நிர்வாகத்தால் தீவிரமாக முறியடிக்கப்பட்டது என்று மற்றவர்கள் கூறினர்.

டி.சி.எஸ் செய்தித் தொடர்பாளர் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையிடம், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், டி.சி.எஸ் அமெரிக்காவில் சம வாய்ப்புள்ள நிறுவனமாக இருந்த வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும் கூறினார். இருப்பினும், டி.சி.எஸ்-ன் உலகளாவிய மனிதவளத் தலைவர் மிலிந்த் லக்காட் தெரிவித்த கருத்துகளை புகார்தாரர்கள் தங்கள் அறிக்கைகளில் மேற்கோள் காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டியில், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும், வேலை செய்யும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நிறுவனம் விரும்புவதாகக் கூறியிருந்தார்.

கடந்த மூன்று மாதங்களில், டி.சி.எஸ் நிறுவனத்தில் இத்தகைய சிக்கலை எதிர்கொண்ட குறைந்தது 22 பணியாளர்கள், சம வேலைவாய்ப்பு வாய்ப்பு ஆணையத்தில் (EEOC) டி.சி.எஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளனர். வாஷிங்டன், டி.சி.-அடிப்படையிலான EEOC, பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் கூட்டாட்சி சட்டங்களைச் செயல்படுத்துகிறது மற்றும் கூட்டாட்சி அபராதங்களை விதிக்கலாம்.

வெளிநாட்டுத் திறமையான பணியாளர்களுக்கான H-1B விசா திட்டம், பூர்வீகத் தொழிலாளர்களை குறைந்த தகுதியுடைய வெளிநாட்டினரால் மாற்றப்படுவதாகக் கூறி அமெரிக்கப் பணியாளர்களை வெகு காலத்திற்கு முன்பே கிளர்ந்தெழச் செய்துள்ளது. நிறுவனங்களால் தொழிலாளர்கள் சார்பாக விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, பதவிக்கு தகுதியான அமெரிக்க பணியாளர்களின் பற்றாக்குறையை நிறுவனம் காட்ட தேவையில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami

India America Tcs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment