நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப வரும் 30ம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. குறிப்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. பல இடங்கள் காலியாக இருப்பதால் நிதிப் பற்றாக்குறையை சந்திப்பதாக தனியார் கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் டிசம்பர் 30ம் தேதிக்குள் மத்திய அரசு சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும். நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.
மருத்துவர்கள் காலியிடங்களை நிரப்ப இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும். எனினும், ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சிறப்புக் கலந்தாய்வில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“