வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்க நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 12
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 5,200 - 20,200
விற்பனையாளர் (Sales Man)
காலியிடங்களின் எண்ணிக்கை : 22
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 6,200 - 26,200
மேற்பார்வையாளர் (Supervisors)
காலியிடங்களின் எண்ணிக்கை : 14
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 6,200 - 28,200
வயதுத் தகுதி : 12.01.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://simcoagri.com/image/main-slider/home-1/simco-application.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கச் செய்ய வேண்டும்.
முகவரி : SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., HEAD OFFICE, TOWN HALL CAMPUS, NEAR OLD BUS STAND, VELLORE – 632004.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு ரூ. 500, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 250
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.02.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-tamil.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“