New Update
/
வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
வழக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Master’s of Social Work, Counselling Psycology or Development Management படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 18,000
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
பல்நோக்கு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://vellore.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், ’பி’ பிளாக் 4 ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் - 9
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.06.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://vellore.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.