Advertisment

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

வேலூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

அரசு வேலைவாய்ப்பு

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

Advertisment

வேலூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: NLC Jobs; என்.எல்.சி வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிப்ளமோ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

வழக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : சமூகப் பணி அல்லது உளவியல் ஆலோசனை இயலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

sபாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பாளராக பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/08/2023080744.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், ’பி’ பிளாக் 4, ஆவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் - 09

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/08/2023080737.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vellore Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment