/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
வருவாய்த் துறை வேலை வாய்ப்பு; 50 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
அரியலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அரியலூர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 21 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த காலிப் பணியிடங்கள் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் தாலுகாக்களில் உள்ளன.
அரியலூர் தாலுகா: 7 பணியிடங்கள்
செந்துறை தாலுகா: 4 பணியிடங்கள்
உடையார்பாளையம் தாலுகா: 9 பணியிடங்கள்
ஆண்டிமடம் தாலுகா: 1 பணியிடம்
கல்வித் தகுதிகள்:
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். (பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு உண்டு)
ராமநாதபுரம் மாவட்டம்:
இதேபோல், ராமநாதபுரம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் மொத்தம் 29 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் ராமேஸ்வரம், ராஜசிங்கமங்கலம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கீழக்கரை, கடலாடி மற்றும் கமுதி ஆகிய தாலுகாக்களில் உள்ளன.
ராமேஸ்வரம் தாலுகா: 1 பணியிடம்
ராஜசிங்கமங்கலம் தாலுகா: 9 பணியிடங்கள்
பரமக்குடி தாலுகா: 3 பணியிடங்கள்
திருவாடானை தாலுகா: 1 பணியிடம்
முதுகுளத்தூர் தாலுகா: 4 பணியிடங்கள்
கீழக்கரை தாலுகா: 2 பணியிடங்கள்
கடலாடி தாலுகா: 6 பணியிடங்கள்
கமுதி தாலுகா: 3 பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த 2 மாவட்டங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் இணையதளங்களான https://Ariyalur.nic.in/ மற்றும் **https://Ramanathapuram.nic.in/**-இல் இருந்து விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் செப்டம்பர் 7, 2025 அன்று மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஊதியம் மற்றும் தேர்வு முறை:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை ஊதியம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.