அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் வரும் வரை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு; சாலையில் காத்திருக்கும் அவலநிலை
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் - பேராசிரியர்கள் வரும் வரை மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு; சாலை, வீடுகளின் வாசல்களில் காத்திருக்கும் அவலநிலை
விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதல்வர், பேராசிரியர்கள் வருகைக்காக வாயில் கதவுகள் திறக்கப்படாததால், மாணவ, மாணவிகள் சாலை மற்றும் அருகிலுள்ள வீடுகளின் வாசலில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
Advertisment
விழுப்புரத்தில் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்லூரியில் பயின்று வருகின்றனர். காலை - மாலை என இரண்டு வேலையாக இரண்டு சுழற்சிகளாக இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. 15க்கும் மேற்பட்ட பாட பிரிவுகளை கொண்டு செயல்படும் இக்கல்லூரியில் காலையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் மாலை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சுழற்சி முறையில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி திறப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பலவேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கிராமப்புறங்களில் இருந்தும் இங்கு மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரி நுழைவு வாயில் கதவுகள் திறக்கப்படாததால் 100க்கணக்கான மாணவிகள் சாலைகளிலும், வீட்டு வாசல்களிலும் மணி கணக்கில் அமர்ந்துள்ளனர். பிரதான சாலையில் மாணவ, மாணவிகள் காத்திருப்பதால் விபத்துக்கள் ஏற்ப்படுகின்றன. மேலும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வரும் வரை வாயில் கதவுகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே இக்கல்லூரி, மாணவர்கள் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் தற்போது கல்லூரி வாயிலை அடைத்து மாணவர்களை காக்க வைத்துள்ள கல்லூரி நிர்வாகத்தின் செயல் பல்வேறு விமர்சனஙகளுக்கு ஆளாகி உள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil