Vellore Institute of Technology Has Announced viteee result 2019 வேலூர் வி.ஐ.டி. கல்வி நிறுவனம், இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. Vellore Institute of Technology (VIT) என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் 2019- 2020 மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 20 வரை நடந்தது.
நுழைவுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
VIT results 2019 Announced at vit.ac.in: வேலூர் வி.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகள்
வி.ஐ.டி நிறுவனத்தின் இணையதளமான vit.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம். இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு தேவையான கேம்பஸ், கோர்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்யலாம்.
அதற்கான கவுன்சலிங் நடத்தப்படும். அதிகாரபூர்வ இணையதளத்தில் முடிவுகளை பார்க்கவும்.