/tamil-ie/media/media_files/uploads/2022/10/dssc-jobs.jpg)
இந்திய விண்வெளி நிறுவனத்தில் டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 273 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்திய விண்வெளி நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
இதையும் படியுங்கள்: வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வேலை; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
காலியிடங்களின் விவரம்
Aeronautical/ Aerospace Engineering - 15
Chemical Engineering – 10
Civil Engineering – 12
Computer Science Engineering – 20
Electrical Engineering – 12
Electronics Engineering - 43
Mechanical Engineering – 45
Metallurgy Engineering – 6
Production Engineering - 4
Fire & Safety Engineering – 2
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் Degree in Engineering முடித்திருக்க வேண்டும்.
Hotel Management/ Catering Technology – 4
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் Degree in Hotel Management/ Catering Technology முடித்திருக்க வேண்டும்.
B.Com (Finance and Taxation) – 25
B.Com (Computer Application) – 75
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் Degree in B.Com (Finance and Taxation/ Computer Application) முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9000
வயது தகுதி: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் 15.10.2022 அன்று நடைபெறுகிறது.
நேர்காணல் நடைபெறும் இடம் : Govt. Polytechnic College, Kalamassery, Ernakulam District, Kerala
மேலும் விவரங்களுக்கு https://www.vssc.gov.in/assets/img/PDF/Recruitment/apprenvscc71022.pdf இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.