கொரோன வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்கும் மாணவ சமுதாயங்களை, இல்லங்களிலிருந்தபடியே, கல்வி தொடர்பான செயல்களின் மூலம், தங்களது நேரத்தை, பயனுள்ள வகையில் செலவிடுவதற்காக உலகில் பெரும்பாலான நாடுகள் போராடி வருகின்றன.
மத்திய அரசின் சார்பில், யுக்தி (YUKTI) <அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் இந்திய இளைஞர்கள் கோவிட் தொற்றை எதிர்கொள்ளுதல்> என்ற இணைய போர்ட்டல் துவக்கப்பட்டது. மாணவர்களுக்கு அதிகத் தரத்திலான கற்றல் சூழ்நிலையை தொடர்ச்சியாக வழங்குவதை இந்த போர்ட்டல் முக்கியதத்துவம் கொடுகின்றது.
அண்டை மாநிலமான கர்நாடகா, இந்த பொது முடக்க காலங்களில், 2020ம் ஆண்டிற்கான சிஇடி மற்றும் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், “GetCETGo” எனும் ஆன்லைன் இலவச பயற்சி செயலியை வடிவமைத்துள்ளது. வீடியோக்கள், பொருளடக்கம், ஆன்லைன் டெஸ்ட் போன்றவைகளுடன் கூடிய ஒரு ஆன்லைன் பயற்சி மையமாக இந்த தளம் இயங்கவிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அந்த போட்டித் தேர்வில் கலந்து கொண்ட 1,94,000 மாணவர்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டில், எதிர்கட்சிகள் கூட அவ்வப்போது புகழும் ஒரே துறை தமிழக பள்ளிக்கல்வித்துறை. இந்த பொது முடக்க காலகட்டங்களில் கல்வித்துறையின் செயல்பாடுகள் மிகவும் முக்கிமானதாக கருதப்படுகிறது. தனியார் பள்ளிகள் கட்டாயம் கட்டணம் வசூலிக்க கூடாது போன்ற உயரிய உத்தரவை பிறப்பித்திருந்தாலும் , நீட் தேர்வு மாணவர்களை கண்டுகொள்ளமல் இருப்பதற்கு, இந்த கொரோனா ஊரடங்கு ஒரு வாய்ப்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அமைந்து விட்டதோ? என்றே கேள்வி எழுகிறது.
செய்தவைகள் என்ன ? : கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக, இதுவரை 10-ம் வகுப்பு தேர்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் உள்ளன. மாணவர்கள், வீட்டிலேயே முடக்கி கிடப்பதால் 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படவேண்டும் என்று கருத்துக்களும், ஒத்திவைக்கப்படும் என்ற யூகங்களும் பல்வேறு தரப்பில் இருந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொது தேர்வு குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. செங்கோட்டையன் தனது ட்விட்டர் பதிவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் ," மாணவர்கள் 11-ம் வகுப்பில் உரிய பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கும், பாலிடெக்னிக் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கும், TNPSC உள்ளிட்ட தேர்வுகள் எழுதுவதற்கும் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியமானது. எனவே, 10-ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடக்கும். மேலும், தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து மே-03 ம் தேதி ஊரடங்கு முடிவுற்ற பின் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, கல்வித்துறையின் மூலமாக தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும்," என்று பதிவு செய்துள்ளார்.
மேலும், நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், ஊரடங்கு முடிவுற்ற பிறகு மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கூடாது : ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவை தமி ழக அரசு பிறப்பித்துள்ளது . அதனை மீறி யாராவது கட்டணம் வசூல் செய்வதாக அரசின் கவனத்திற்கு சென்றால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு செய்யாதவை: உண்மையில், 2020ம் ஆண்டு நீட் தேர்வு எழுத இருக்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் தான் இந்த பொது முடக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மானவர்கள் பயற்சி மையங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாராகி வருகின்றனர். இந்த பொது முடக்க காலத்திலும், தனியார் பயற்சி மையங்கள் வாட்ஸ்அப், ஜூம் வீடியோ செயலி, ஆன்லைன் மாக் டெஸ்ட், போன்றவைகள் மூலம் மாணவர்களுக்கு தொடர்ச்சியான ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தனியார் பயற்சி மையம் தந்து கொண்டிருக்கிறது . ஆனால், ஏழை மாணவர்களுக்கு இவையெல்லாம் எட்டடாத கனியாகவே உள்ளது.
கடந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட வேண்டிய, தமிழக அரசின் நீட் தேர்வு இலவச பயற்சி வகுப்புகள், இந்த வருடம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோன வைரஸ் பொது முடக்கம் அனைத்து வாய்ப்புகளையும் சிதறடித்தது.
கொரோனா வைரஸ் தொடர்பாக, ஏன் அமைச்சருக்கு பதில் வேறொருவர் செய்தியாளர்களை சந்திக்கிறார்? ஏன், அந்த அமைச்சர் மீண்டும் வந்தார்? என்ற விவாதங்களுக்கு இடையில், தமிழ் பள்ளிக்கல்வித் துறை நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஆயிரகணக்கான ஏழை மாணவர்களுக்காக செய்தியாளர்களை (ஆன்லைன் வாயிலாக) சந்திக்க வேண்டும். 2020ம் ஆண்டு நீட் தேர்வின் நிலை என்ன? உச்ச நீதிமன்றம் வழக்கு நிலைமை என்ன? நீட் தேர்வு இலவச பயற்சி வகுப்பு எப்போது? கொரோனா வைரசால் தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கான பதிலில் தான் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு உள்ளது.
கர்நாடாக மாநில அரசை போலவே நமது மாநில அரசும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பிரத்தியோக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புதிதாக செயலி உருவாக்கப் படாவிட்டாலும், ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை நீட் தேர்வு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் முடிக்கி விட வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.