பள்ளிகள் எப்போது திறக்கும்? எப்படி செயல்படும்? மத்திய கல்வி அமைச்சர் பதில்

கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை புதுப்பித்துக்கொள்வதற்கும் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு ஆசிரியர்களையும், மாணவர்களையும் கேட்டுக்கொண்டார்.

mind games website pschool,in lockdown india covid 19

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின்பு, பள்ளிகளைத் திறப்பதற்கான ஒரு புதிய முறையை என்.சி.இ.ஆர்.டி ஆராய்ந்து வருவதாகவும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கான முறைகளை யு.ஜி.சி உருவாக்கி வருகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆசிரியர்களுடனான காணொலி உரையாடலின் போது தெரிவித்தார் .

வகுப்புகளுக்கான நேரங்களை மாற்றியமைத்தல், வகுப்பை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்தல், சமூக விலகல் நெறிமுறை அடிப்படையில் இருக்கைகள்  ஏற்பாடு செய்தல் போன்றவைகள் பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கலாம்  என்றும் தெரிவித்தார்.

2020-21ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டுப் பருவம், பழைய கல்லூரி மாணவர்களுக்கு 01.08.2020 அன்றும், புதிய கல்லூரி மாணவர்களுக்கு 01.09.2020  அன்றும் தொடங்கும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தெரிவித்திருந்தாலும், பள்ளிகள் திறப்பு எப்போது என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மாணவர்களின் ஆரோக்கியத்தில்  அக்கறை செலுத்திவருகிறோம். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் நிலைமை இயல்பாக்கப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் ”என்று ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்  கருத்து தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

பதிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்டில் புதிய தொகுதி வகுப்புகளுக்கு செப்டம்பர் முதல் தொடங்கும் என்று யுஜிசி கூறியுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து தெளிவு இல்லை. “எங்கள் மாணவர்களின் ஆரோக்கியம் எங்கள் முக்கிய அக்கறை. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் நிலைமை இயல்பாக்கப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் ”என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை புதுப்பித்துக்கொள்வதற்கும் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு ஆசிரியர்களையும், மாணவர்களையும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று பொது முடக்கநிலையால்,  மார்ச் நடுப்பகுதியில் இருந்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. அதனையடுத்து, டி.டி.எச் சேனல், திக்‌ஷா, இ-பாடசாலை, தேசிய டிஜிட்டல் நூலகம், ஸ்வயம், ஃபாசி (FOSSEE,), இ-ஷோத்சிந்து, இ-யந்ரா, மொழி கற்றுக்கொள்வதற்கான தனிப்பயிற்சி மற்றும் மெய்நிகர் ஆய்வுக்கூடங்கள் போன்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு இயங்குதளங்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர்.

ஆன்லைன் வழி கல்வி முறையில் புதுமையை உண்டாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட  தீக்ஷா வலைத்தளத்தில் ஆசிரியர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுவரை 9000 க்கும் மேற்பட்ட  ஆசிரியர்கள் தங்கள் பங்களிப்புகளை தந்துள்ளதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையை ஆன்லைன் கல்வி முறை  உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: When will schools reopen and how will they function

Next Story
சி.பி.எஸ்.இ புதிய தலைவராக மனோஜ் அஹுஜா நியமனம்CBSE Merit Scholarship Scheme for Single Girl Child
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express