உயர் தொழில் நுட்பத்தை மாணவர்களிடம் கொண்டு செல்ல, விப்ரோ புதிய முயற்சி
தற்போது, விப்ரோ தனது TalentNext திட்டத்தை, நாஸ்காமின் Futureskills உடன் இணைத்துள்ளது. இந்த புதிய முயற்சி,விப்ரோ/நாஸ்காம் சான்றிதழ் பெற்ற திறமையான மாணவர்களை உருவாக்கும்.
By: WebDesk
Updated: December 25, 2019, 01:08:04 AM
இந்தியாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 10,000 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய வயது தொழில்நுட்பங்களுக்கான திறன் தளத்தை அறிமுகப்படுத்த, ஐடி வர்த்தக அமைப்பான நாஸ்காம் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
Futureskills என்ற தளத்தை நாஸ்காம் நிர்வகித்து வருகிறது. தொழில்நிறுவனங்கள்- உயர்க் கல்வி இவைகளுக்கான இடைவெளியைக் குறைப்பது இதன் நோக்கமாகும். வரும் காலங்களில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் உயர் தொழில்நுட்பத்தை மாணவர் சமுதாயத்திற்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட தளமாகும். செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா , மேகக் கணிமை, சைபர் பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற உயர் தொழில் நுட்பங்களுக்களை இந்த தளம் பரப்பி வருகிறது
விப்ரோ நிறுவனம் தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வின் கீழ் TalentNext என்ற திட்டம் இயக்கப்படுகிறது. இது பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் தலைவர்களைத் தயாரித்து வருகிறது.
தற்போது, விப்ரோ தனது TalentNext திட்டத்தை, நாஸ்காமின் Futureskills உடன் இணைத்துள்ளது. இந்த புதிய முயற்சி, விப்ரோ/நாஸ்காம் சான்றிதழ் பெற்ற திறமையான மாணவர்களை உருவாக்கும்
FutureSkills தளத்தில் தேர்வர்களுக்கு உயர்தொழில் நுட்பம் போதுமான அறிவைக் கொடுத்து வரும் நிலையில், விப்ரோ TalentNext-ன் வருகை பல்கலைக்கழகத்திற்கும், தொழிநுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பை பலப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2030ம் ஆண்டளவில் 90 மில்லியன் உயர் தொழிநுட்ப நிபுணர்களை தொழில்துறையில் சேர்ப்பதே இதன் நோக்கம் என்றும், விப்ரோவுடனான கூட்டாண்மை அவர்கள் வேலை செய்ய சரியான திறன்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் என்றும் நாஸ்காம் தலைவர் டெப்ஜனி கோஷ் கூறியுள்ளார்.