/indian-express-tamil/media/media_files/2025/09/30/wireman-helper-competency-examination-2025-09-30-19-13-16.jpg)
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி விவரங்கள் என்ன?
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) 2025-ம் ஆண்டு டிச.13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்
இந்தத் தகுதிகாண் தேர்வுக்குப் பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிவாய்ந்த கம்பியாள் உதவியாளர்கள், தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரருக்கான முக்கியத் தகுதிகள்
விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தேர்விற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் / முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
கடலூர்.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 17.10.2025 ஆகும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 04142-290273 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.