இளம் சாதனையாளர் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?

பிரதமரின் இளம் சாதனையாளர் உதவித்தொகை நுழைவுத் தேர்வு; தகுதிகள், விண்ணப்பச் செயல்முறை, கடைசி தேதி, தேர்வு தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே

பிரதமரின் இளம் சாதனையாளர் உதவித்தொகை நுழைவுத் தேர்வு; தகுதிகள், விண்ணப்பச் செயல்முறை, கடைசி தேதி, தேர்வு தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? அன்பில் மகேஷ் விளக்கம்

YASASVI Scheme 2022: NATA invites applications for Young Achievers Scholarship entrance test; check details: துடிப்பான (வைப்ரண்ட்) இந்தியா (YASASVI) திட்டத்திற்கான PM Young Achievers Scholarship விருது திட்டத்திற்கான விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்போது விண்ணப்பிக்கலாம்.

Advertisment

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் திட்டத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 26 வரை அவகாசம் உள்ளது, மேலும் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களுக்கான திருத்தம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்: NEET Exam ரிப்பீட் போகலாமா? பெஸ்ட் ஆப்ஷன் எது? கல்வியாளர் விளக்கம்

இளம் சாதனையாளர் உதவித்தொகை: விண்ணப்பிக்கும் முறை

Advertisment
Advertisements

படி 1: முதலில் https://yet.nta.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

படி 2: உங்கள் பதிவு நிலையைப் பொறுத்து, முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் 'பதிவு' அல்லது 'உள்நுழை' இணைப்பைக் கிளிக் செய்யவும்.

அதாவது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உள்நுழை என்பதை கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்யவில்லை என்றால், முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

படி 3: தேவையான அனைத்து தனிப்பட்ட மற்றும் கல்வி போன்ற தொழில்முறை விவரங்களை நிரப்பவும்.

படி 4: தேவையான ஆவணங்கள், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றவும்.

படி 5: இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால தேவைக்காக பதிவிறக்கி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தப்பட்ட பிறகு, NTA ஹால் டிக்கெட்களை செப்டம்பர் 5, 2022 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும்.

இந்த ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில், மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். இது 100 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQகள்) அடங்கிய புறநிலை வகையாக இருக்கும். இது இந்தியா முழுவதும் 78 நகரங்களில் நடைபெறும், மேலும் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

MSJ&E ஆல் அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் படிப்பதற்கான உதவித்தொகை வழங்குவதற்காக, OBC, EBC மற்றும் DNT பிரிவைச் சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மற்றும் XI வகுப்புகளில் படிக்கும் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இளம் சாதனையாளர் உதவித்தொகை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: