/tamil-ie/media/media_files/uploads/2023/03/zoho-main.jpg)
ஜோஹோ நிறுவன வேலை வாய்ப்பு
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான (IT) ஜோஹோவில் (ZOHO) இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் ஜோஹோ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் தற்போது க்வாலிட்டி அஸ்யூரன்ஸ் பொறியாளர் (QA Engineers) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தற்போதைய அறிவிப்பில் காலியிடங்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நிறைய பேர் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
தகுதிகள்
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா ப்ரோகிராமிங் (டேட்டா டைப்ஸ், வேரியபிள்ஸ், ஆப்ரேட்டர்ஸ், புளோ கன்ட்ரோல் ஸ்டேட்மென்ட்ஸ், மெத்தட்ஸ்) (Java Programming (data types, variables, operators, flow control statements, methods (built-in as well as user-defined), Exception handling, File Handling, Database Operations, and OOPS concepts) தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு manual and automation testing பிரிவில் பணி அனுபவம் இருக்க வேண்டும். மேலும் MySQL/PqSQL, Selenium, Jmeter-ல் அனுபவம் இருக்க வேண்டும். ReTest மற்றும் Bugs உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.
இந்த இன்ஜினீயர் பணிக்கு சம்பளம் குறித்த விபரங்கள் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்தப் பணிக்கு தேர்வாகும் இன்ஜினியர்கள் சென்னை, மதுரை, நெல்லை, சேலம் என தமிழ்நாட்டில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பம் செய்துக் கொள்வது சிறந்தது. விண்ணப்பம் செய் விரும்புவோர் ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது https://www.zoho.com/careers/jobdetails/?job_id=2803000614913581 என்ற இணையதளப் பக்கம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.