பிரபல ஐ.டி நிறுவனமான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. ஜோஹோ நிறுவனம் தமிழகத்தை மையமாகக் கொண்டு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிய மென்பொறியாளர்கள் பலரும் விரும்புவர்.
இந்தநிலையில், ஜோஹோ நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் 3 வகையான இண்டர்ன்ஷிப் (Research and Development - Internship) வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இண்டர்ன் -கம்ப்யூட்டிங் & மெசின் லேர்னிங் (Intern – Computing & Machine Learning), இண்டர்ன் – மெக்கானிக்கல் & ரோபாட்டிக்ஸ் (Intern – Mechanical & Robotics Hardware), இண்டர்ன் – எலக்ட்ரானிக் & எம்பெட்டட் (Intern – Electronic and Embedded) ஆகிய பிரிவுகளில் இண்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதில் இன்டர்ன் - கம்ப்யூட்டிங் & மெஷின் லேனிங் பிரிவுக்கு பில்டிங், டெஸ்ட்டிங், டெப்லாயிங் மெஷின் லேனிங், டீப் லேனிங் டெவலப்பிங் அல்காரிதமிக் சொல்யூஷன், நியூ பிளாட்பார்ம் டெவலப் செய்தல் உள்ளிட்ட பணிகள் இருக்கும்.
இன்டன் - மெக்கானிக்கல் & ரோபோட்டிக்ஸ் ஹார்டுவேர் பிரிவுக்கு என்றால் கேட் (CAD) சாப்ட்வேர் பயன்படுத்தி மெக்கானிக்கல் டிசைன் செய்ய வேண்டும். ஃபேப்ரிகேஷன், அசம்பிளி அண்ட் டெஸ்ட்டிங், மோட்டார்ஸ்/அக்டூடேட்டர்ஸ் பயன்படுத்தி எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் டிசைன், மெக்கானிக்கல்/ரோபோட்டிக்ஸ் சிஸ்ட்ம்ஸின் சென்சார்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்ளிட்ட பணிகள் இருக்கும்.
இன்டன் - எலக்ட்ரானிக்ஸ் & எம்பெட்டட் பிரிவுக்கு எம்பெட்டட்/ ரியல் டைம் சாப்ட்வேர் டிசைன், கோடிங் மற்றும் டெஸ்ட்டிங், எம்.சி.யூ மற்றும் ஃஎப்.பி.ஜி.ஏ (MCU and FPGA) அடிப்படையில் எம்பெட்டட் ஹார்ட்வேர் டிசைன் மற்றும் டெஸ்ட்டிங், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேரின் எம்பெட்டட்/ ரியல் டைம் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பணிகள் இருக்கும்.
இந்த இன்டன்ஷிப்க்கு 2021 முதல் 2024 வரை கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிற நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருந்தால் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படாது. இந்தப் பணிக்கு தேர்வாகும் நபர்கள் கேரளாவில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை, உதவித்தொகை விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.zohocorp.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 12 ஆம் தேதியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.