/tamil-ie/media/media_files/uploads/2023/03/zoho-main.jpg)
ஜோஹோ நிறுவன வேலை வாய்ப்பு
பிரபல ஐ.டி நிறுவனமான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. ஜோஹோ நிறுவனம் தமிழகத்தை மையமாகக் கொண்டு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிய மென்பொறியாளர்கள் பலரும் விரும்புவர்.
இந்தநிலையில், ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர்.
இந்தப் பணியிடங்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். எளிதில் கற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மின்னஞ்சல், சாட் மற்றும் அழைப்புகள் உள்ளிட்ட அனைத்து தளங்கள் பற்றிய புரிதல் வேண்டும். மின்னஞ்சல் சேவை வழங்குநர் அல்லது மின்னஞ்சல் பாதுகாப்பு மென்பொருள் விற்பனையாளர் அல்லது டொமைன் ஹோஸ்டிங் வழங்குனருடன் தொழில்நுட்ப ஆதரவு பொறியாளர் / வாடிக்கையாளர் சேவை நிபுணர் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் நன்மையாக இருக்கும். நெட்வொர்க்கிங் மற்றும் ஆக்டிவ் டைரக்டரி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் வரை தேர்வு செயல்முறை இருக்கும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பணியிடங்களுக்கான சம்பள விபரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், கல்வித் தகுதி, முந்தைய பணி அனுபவம் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.zohocorp.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.