/tamil-ie/media/media_files/uploads/2018/01/a184.jpg)
2019 General Election DMK Alliance
2019 General Election DMK Alliance : இந்த வருடம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாமல் மாநில அளவிலும் பெரும் பரபரப்பினையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக - காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், திமுகவுடன் மாநில கட்சிகளான மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி வைக்க உள்ளன.
பலம் பொருந்திய திமுக தொகுதிகள் எது ?
இந்நிலையில் கடந்த 20ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக துரைமுருகன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முதல் கூட்டமானது கடந்த 26ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ள தொகுதிகள் எது என்று விவாதிக்கப்பட்டது.
மிக விரைவில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது திமுக. இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு அடங்கிய குழுவிற்கு தலைமையாக துரைமுருகனை திமுக 20ம் தேதி நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : நாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.