/tamil-ie/media/media_files/uploads/2019/02/actor-ranjith-with-ttv.jpg)
Actor Ranjith, TTV Dhinakaran, டிடிவி தினகரன், நடிகர் ரஞ்சித்
Actor Ranjith Joins With TTV Dhinakaran: பாமக.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், மறுநாளே டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்டு இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (அமமுக) இணைந்தார்.
நடிகர் ரஞ்சித், பாமக.வில் இணைந்து செயல்பட்டார். அந்தக் கட்சியில் மாநில துணைத் தலைவர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதிமுக அரசு மீது ஊழல் புகார்களை கூறி வந்த பாஜக, திடுதிப்பென அதிமுக.வுடன் கூட்டணி அமைத்ததை நடிகர் ரஞ்சித் ஏற்கவில்லை. நேற்று(பிப்ரவரி 26) அவர் பாமக.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து நேற்று அவர் எதுவும் கூறவில்லை.
இந்தச் சூழலில் இன்று (பிப்ரவரி 27) புதுவையில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார் நடிகர் ரஞ்சித். அப்போது அவர் அமமுக.வில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தலைவருடன் இணைந்திருப்பதாக நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.