Advertisment

கணவர் தொகுதியில் சுயேட்சையாக நிற்க முடிவு செய்த நடிகை சுமலதா! என்ன காரணம்?

எந்த மிரட்டலுக்கு அஞ்ச போவதில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress sumalatha

actress sumalatha

actress sumalatha : கர்நாடக மாநிலத்தின் மண்டியா தொகுதியில் நடிகை சுமலதா அம்பரீஷ், சுயேட்சையாக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

சுயேட்சையாக நிற்கும் நடிகை சுமலதா:

கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் அண்மையில் காலமானார். அம்பரீஷின் சொந்த‌ தொகுதியான மண்டியாவில் அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடாவை களமிறக்கவும் குமாரசாமி திட்டமிட்டார். இதனால்,கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் அந்த தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுமலதா, மண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். அதேசமயம் பாஜக தன்வசம் இழுக்க முயற்சித்து வந்தது. இந்நிலையில் தான் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக சுமலதா நேற்று (19.3.19) அறிவித்தார்.

பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைப்பெற்ற  செய்தியாளர் சந்திப்பில்  நடிகை சுமலதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  இந்த சந்திப்பில் சுமலதா பேசியதாவது,

”தவிர்க்க முடியாத சூழலில் அரசியலுக்கு வந்துள்ளேன். அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். வரும் 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்.

 வெற்றி, தோல்வி முக்கியமல்ல. மண்டியா மக்களுக்கு பட்ட நன்றிக்கடனை தீர்க்க வேண்டும். கர்நாடக மாநில மக்களின் பிரச்சனைக்காக போட்டியிடுவேன். மண்டியா விவசாயிகள்  தங்கள் வாழ்வாதாரக்த்தை இழந்து வருகின்றன.  காவிரி விவகாரத்தில் அம்பரீஷ் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். அவரின் மறைவுக்கு பின்பு அவரின் கனவுகளை நனவாக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்

publive-image

மண்டியாக் தொகுதியில் பல இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தேன். அங்கிருந்த மக்கள் என்னை தேர்தலில் நிற்கும்படி வலியுறுத்தினர். அதனால் தைரியமாக  அவர்களை நம்பி தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறேன். டவுளின் விருப்பம், மக்களின் ஆசி மற்றும் அம்பரீசின் வழிகாட்டுதல்படி நான் நடந்து கொள்வேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் .ஆதரவு பொறுத்தவரையில் கன்னட நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் எனக்கு ஆதரவு தந்துள்ளனர்.

எனக்காக நடிகர்கள் தர்ஷன், யஷ் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.  அதை விட  மண்டியா தொகுதி மக்கள் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். எந்த மிரட்டலுக்கு அஞ்ச போவதில்லை. இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை. “ என்றும் சுமலதா தெரிவித்துள்ளார்.

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment